தற்போது ஆன்லைன் விளையாட்டு மிகவும் அதிகமாகவே மக்களிடம் பேசப்பட்டு வருகிறது. அதனால், பல்வேறு உயிர்கள் பலியாகியுள்ளன. இதற்கு எதிராக அரசும் அவ்வப்போது பொதுமக்களுக்கு அறிவுரைகளை கூறி வருகிறது.
இருந்தும் சில சினிமா நடிகர்கள், அதுவும் பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் ஹிருத்திக் ரோஷன் போன்ற ஹீரோக்கள் , தமிழில் மிகவும் பரிச்சயமாக இருக்கும் பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் கூட இந்த விளையாட்டு விளம்பரங்களில் நடித்து இருந்துள்ளனர்.
இது குறித்து அண்மையில் பேசிய இயக்குனர் மனோபாலா,’ என்னை ஒரு நாள் ஒரு விளம்பர படத்திற்காக கூட்டி சென்றார்கள். அப்போது என்ன விளம்பரம் என்று கூட எனக்கு தெரியாது. முதல் நான்கு வசனங்களை நான் பேசிவிட்டேன். ஐந்தாவது வசனம் பேசும்போது தான் இது தவறாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். பிறகுதான் என்ன விளம்பரம் என்று நான் தெரிந்து கொண்டேன்.
இதையும் படியுங்களேன் – எனக்கும் இந்த மாதிரி செய்ய ஆசையா இருக்குபா.! ஆனா, விட மாட்றாங்க.! வேதனையில் தளபதி விஜய்.!
தவறாக விளம்பரம் நடித்திருந்தால் நான் உடனே மன்னிப்பு கேட்டு விடுவேன். அப்படி தவறாக விளம்பரம் நடிப்பதற்கு பதிலாக, ஜட்டி விளம்பரத்தில் கூட நடித்துவிடலாம். நாம் நடிக்கும் விளம்பரங்கள் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது. தவறான பொருள்களை கொண்டு சேர்த்துவிட கூடாது என்று மிகவும் தெளிவாக ஆத்மார்த்தமாக பதிலளித்தார் இயக்குனர் நடிகர் மனோபாலா.
மக்களை தவறான வழிக்கு வழிநடத்தும் அந்த மாதிரியான விளம்பரங்களில் நடிப்பதை காட்டிலும், ஜட்டி விளம்பரத்தில் நடித்து சம்பாதித்து விடலாம் என்று கூறிய மனோபாலாவிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இவரது இந்த மனது பெரிய நட்சத்திரங்களுக்கு ஏன் இருப்பதில்லை என்பதுதான் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…