vijay
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் விஜய் இப்போது லியோ படத்தில் பயங்கர பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகள் சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா, கௌதம் வாசு தேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான் , சஞ்சய் தத் என பல முன்னனி நடிகர்கள் நடித்து வரும் படமாக அமைய இருக்கிறது. முக்கால் வாசி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் மீதமுள்ள போர்ஷனை சென்னையில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
லோகேஷ் ஒரு முடிவோடுதான் இருக்கிறார். மாஸ்டரின் வெற்றியை விட பல மடங்கும் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு விஜயுடன் சேர்ந்து நடிக்கிறார் மன்சூர் அலிகான். ஏற்கெனவே ஆரம்பகால படங்களில் இருவரும் சேர்ந்து பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர்.
அதிலும் முக்கிய படமாக அமைந்தது ‘தேவா’ திரைப்படம் தான். அதன் பிறகு லியோ படத்தில் இணைந்திருக்கிறார். ஆனால் இன்னும் அவருக்கான கால்ஷீட் ஆரம்பிக்கவில்லையாம். தேதிகள் மட்டும் கேட்டிருக்கின்றனராம். காஷ்மீர் படப்பிடிப்பு முடிந்த பிறகு அழைப்போம் என்று சொல்லியிருக்கின்றனராம். மேலும் நீண்ட நாள்கள் கால்ஷீட் கேட்டு வாங்கியிருக்கின்றனராம்.
இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் அமீர் – பாவ்னி இணைந்து நடிக்கும் புதிய படமான சரக்கு திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மன்சூரிடம் நிருபர்கள் ‘விஜயின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த மன்சூர் ‘ நாட்டுல பெரிய புரட்சிகள் எல்லாம் வர இருக்கு.தமிழ் நாட்டோடு தலைவிதியை யாரும் மாத்திரதா இல்ல, அரசியல் ரீதியாக மக்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள், அதுதான் முக்கியமே தவிர,
வேலை வாய்ப்பு இல்லாமல், வேலை செய்ய கூப்பிட்டாலும் வருவதற்கு தமிழ் மக்கள் எங்கே இருக்காங்கனு கூட தெரியல’ என்று கூறி நிரூபர்களின் மூக்கை உடைத்தார் மன்சூர். அதாவது தமிழ் நாட்டை எப்படி உயர்த்தனும் என்பதை யோசிக்கிறதை விட்டு விட்டு விஜயின் வளர்ச்சியை பற்றி கேட்காதீங்க என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார் மன்சூர் அலிகான்.
இதையும் படிங்க :தமிழில் பல பிரபலங்களோடு நடித்த நடிகர்.. – இப்போ பீச்சில் ஐஸ் விக்கிறாராம்!..
Vijay Devarakonda:…
Kantara Chapter…
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…