mansoor
Rajini: சமீப காலமாகவே நடிகர் மன்சூர் அலிகான் பெரிய பெரிய நடிகர்கள் பற்றியும் அவர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பற்றியும் மேடைகளில் அவருடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார். அதற்கு காரணம் சின்ன பட்ஜெட் படங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்பதனால் தான். குறுகிய பட்ஜெட்டில் படம் எடுப்பதால் அவர்களை ஒரு தூசு போல நினைக்கிறார்கள்.
ஆனால் அப்படி வரும் படங்கள் பெரும்பாலும் நல்ல கதைகளத்தோடு அமைந்து ஒரு சில நேரங்களில் மக்களை திருப்திப்படுத்தி வருகின்றன. ரசிகர்களின் பார்வை எப்போதுமே பிரம்மாண்டம் பெரிய நடிகர்கள் என்பது போல இருப்பதால் இந்த மாதிரி சின்ன பட்ஜெட்டில் அதுவும் நல்ல கதைக்களத்தோடு வரும் படங்களின் நிலைமை படு மோசமாகி போகின்றது.
இதையும் படிங்க:கமல் படத்துல கலாட்டா… டைரக்டர் ஓட்டம்… அப்புறம் வந்தது தான் முரட்டுக்காளை..!
அதனால் அந்த தயாரிப்பாளர்களின் நிலைமையும் கேள்விக்குறியாகி வருகிறது. இதைப்பற்றி சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய மன்சூர் அலிகான் ‘இந்த மாதிரி நேரத்தில் ரஜினியை பற்றி பேசாமல் இருக்க முடியாது. அவருக்கு இப்போது 70, 80 வயது ஆகிவிட்டது. அதனால் அவருக்கு ஹீரோயின் தேடுவதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது .
ஒன்று அடுத்தவன் பொண்டாட்டியா இருக்கணும். அதாவது 20, 25 வயதில் ஹீரோயினை அவருக்கு ஜோடியாக்க முடியாது. திருமணமான நடிகைகள் தான் அவருக்கு செட் ஆகும் என்ற வகையில் சொல்கிறேன். யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உதாரணமாக ஐஸ்வர்யாராயை எடுத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க:அம்மா நீங்க எனக்கு செஞ்சத மறக்கவே மாட்டேன்!.. விஜய் அம்மாவுக்கு நன்றி சொன்ன அஜித்!…
ஆனால் அவருக்கும் இப்போது வயதாகி விட்டது. கிழடு தட்டி விட்டது .தயாரிப்பாளர்களும் கோடி கணக்கில் இவர்களை தேடித்தான் செல்கிறார்கள். இப்படி போகும் பட்சத்தில் சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை படு மோசமாக போகின்றது. அதனால் சின்ன பட்ஜெட் தானே என்று நினைக்காமல் உள்ளே இருக்கும் அந்த கதையை பாருங்கள். அதுவும் உங்களை ஒரு விதத்தில் ரசிக்க வைக்கும்’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் மன்சூர் அலிகான்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…