Vijay: ரஞ்சிதமே உதடு வலிக்க கொஞ்சணுமே என டான்ஸ்லாம் ஆடிட்டு அரசியலுக்கு வந்திருக்காரு: விஜயை கலாய்த்த மன்சூர் அலிகான்
திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக விளங்கும் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். ஆனாலும் களத்தில் இன்னும் இறங்காமல் அறிக்கை, வீடியோ என வெளியிட்டு கொண்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் சுற்றுபயனம் செய்து மக்களை சந்தித்து வந்தார். ஆனால் கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பின் இன்னும் வெளியில் வராமல் அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜ்ய் அதிமுகவுடன் கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட்து. ஆனால் த்னித்துதான் போட்டி என்று வரது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் மன்சூர் அலிகான். அப்போது அவர் கூறுகையில் , நான் எப்போதே அரசியலுக்கு வந்து விட்டேன். எனது அரசியல் மக்களுக்கான அரசியல். விஜய் மாதிரி அப்படியே வானத்தில் சுத்திக்கிட்டு இருக்க மாட்டேன். .விஜய் வானத்திலேயே பறந்துகிட்டு இருக்காரு களத்தில் வந்து போராடுவதில்லை. ரஞ்சிதமே உதடு வலிக்க கொஞ்சணுமே என்று முட்டி வலிக்க டான்ஸ்லாம் ஆடிட்டு அரசியலுக்கு வந்திருக்காரு. அதனால மக்களுக்கு பாடுபட தெருவுல நடந்தா முட்டி வலிக்கும். அவரும் மத்திய அரசுக்கு சொம்பபடிக்க வந்தவர்தான் என மன்சூர் அலிகான் கூறினார்.
