
latest news
Karur: வெட்கமா இல்லயா?!.. இது அரசியலா?!.. கரூர் சம்பவத்திற்கு பொங்கிய மன்சூர் அலிகான்!..
TVK Vijay: தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து பேசி வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சி, அரியலூர் பகுதியில் பேசினார். கடந்த 20ம் தேதி திருவரூர் மாவட்டத்தில் பேசினார். கடந்த சனிக்கிழமை அவர் நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்கு பயணம் செய்தார்.
விஜய் ஒரு நடிகர் என்பதால் அவரைப் பார்க்கும் ஆவலோடு ரசிகர்களும் பொதுமக்களும் அவர் செல்லும் வழியெங்கும் கூடினார்கள் நாமக்கல்லில் காலை 8:30 மணிக்கு அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் மதியம் 3 மணிக்கு அங்கு சென்றார். அங்கு பேசி முடித்துவிட்டு அங்கிருந்து கரூருக்கு இரவு 7 மணி அளவில் சென்றார்.
அவர் சென்றவுடனேயே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜயை பார்ப்பதற்காக பல ஆயிரம் பேர் கூடிவிட்டனர். மக்கள் காத்திருந்த சாலை மிகவும் குறுகலானது என்பதால் இரண்டு புறமும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கீழே விழுந்து அதில் மூச்சுத் திணறி பலரும் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இதற்கு காரணம் விஜய்தான் என திமுகவினர் பேசி வருகிறார்கள்.

தவெகவினரோ ‘இது முழுக்க முழுக்க ஆளுங்கட்சியின் திட்டமிட்ட சதி. வேண்டுமென்று மிகவும் குறுகலான பாதையில் அனுமதி கொடுத்தனர். குண்டர்களை ஏவி விட்டு கூட்டத்தில் கலவரம் செய்தனர். பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வண்டிகளை கூட்டத்திற்குள் அனுப்பினார்கள். இதனால்தான் மக்கள் இரண்டு பக்கமும் நகர வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்’ என அவர்கள் குறை சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் ‘மக்கள் முன் பேசுவதற்கு அனுமதி கேட்டால் போலீஸ் 28 கண்டிஷன் போடுகிறது. வேறு எந்த கட்சிக்கும் இப்படி கண்டிஷன் போடுவதில்லை. 200 ரூபாய் பணம், சாராயம், பிரியாணி கொடுத்து கூட்டத்தை கூட்டுபவனுக்கு பல ஆயிரம் ஏக்கரில் கூட்டம் நடத்த அனுமதி கொடுப்பீர்கள். பல ஆயிரம் பேர் கூடுகிறார்கள் என தெரியும். அதற்கு ஏற்ற பாதுகாப்பை போலீஸ் கொடுத்திருக்க வேண்டும். இவ்வளவு பேர் கூடுகிறார்கள் என தெரிந்தும் முட்டு சந்தில் போய் விஜயை நிறுத்தியது ஏன்?..
குண்டர்களை ஏவி விட்டு ஏதேதோ செய்திருக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள். அவர்கள் எத்தனை பேரை குத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஒரே இரவில் எல்லோரையும் போஸ்ட்மார்ட்டம் செய்து கொடுத்துவிட்டார்கள். போஸ்ட்மார்ட்டத்தில் அவன் எங்கு குத்தினான்? எங்கு காயம் என்பது தெரிந்திருக்கும். நான் மட்டும் அங்கு இருந்தால் நடந்த வேறு மாதிரி ஆகி இருக்கும்
மேலிடம் என்ன சொல்கிறதோ அதைத்தான் போலீசார் கேட்பார்கள். கொஞ்சம் விட்டிருந்தால் விஜய்க்கு சமாதி கட்டியிருப்பார்கள். இது அரசியலா? வெட்கக்கேடானது!..’ என பொங்கி இருக்கிறார்.