Categories: Cinema News latest news

இப்படியே போனா அடுத்த பாலா மாரி செல்வராஜ்தான்!…மாமன்னன் அலப்பறைகள்…

சில இயக்குனர்கள் இதுதான் கதை, இதுதான் காட்சி, இதைத்தான் எடுக்கப்போகிறோம் என சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பு தளத்திற்கு செல்வார்கள். சில இயக்குனர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று கதையை, வசனத்தை, காட்சியை யோசிப்பார்கள். அப்படி எடுத்தும் சில திரைப்படங்களும் ஹிட் ஆகியுள்ளது.

சில இயக்குனர்கள் அப்படி படப்பிடிப்பு தளத்திற்கு சென்று யோசித்து எதுவும் தோன்றாமல் இன்று படப்பிடிப்பு வேண்டாம் என கூறிவிட்டு சென்று விடுவார்கள்.

இயக்குனர் பாலா கூட அப்படித்தான். அதனால், இத்தனை நாட்கள் படப்பிடிப்பு என அவர் எடுக்கும் திரைப்படங்களுக்கு அவர் கூறவே மாட்டார். தற்போது மாரி செல்வராஜும் இந்த வரிசையில் இணைந்துள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது.

udhay

பரியேறும் பெருமாள், கர்ணன் என அழுத்தமான இரண்டு கதைகளை இயக்கிய மாரிசெல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு என்ன காட்சி என யோசித்து எடுத்து வருகிறாராம். மேலும், ஒரு நாள் எடுத்த காட்சியையே அடுத்த நாளும் எடுக்கிறார் என செய்திகள் கசிந்துள்ளது.

எனவே, மாரி செல்வராஜும் விரைவில் பாலாவின் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
சிவா