யார் அந்த மஞ்சணத்தி...? மனம் திறந்த மாரிசெல்வராஜ்..!

 
mariselvaraj

முதன் முறையாக இசைஞானி இளையராஜாவும் கைகோர்க்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ். இந்தப் படத்தின் கதையை இளையராஜாவை மனதில் கொண்டு தான் எழுதினாராம். படத்தில் வரும் மஞ்சணத்தி குறித்து அவர் என்ன சொல்கிறார்னு பாருங்க. 

மஞ்சணத்தி பற்றி அந்தப் படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜே ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். யார் அந்த மஞ்சணத்தி என்று. மஞ்சணத்தி என்பது ஒரு மரம். எங்க ஊருல அதுமாதிரி பல மரங்கள் உள்ளன. ஆடு மேய்க்கும்போது அந்த மரத்தின் பழங்களை எல்லாம் எடுத்து நாங்க சாப்பிடுவோம். சிலர் அந்த மரத்துக்கு துணியைக் கட்டி விடுவர். மரத்துல மஞ்சணத்தி என்ற ஒரு தெய்வம் இருக்குறதனால நீங்க யாரும் ஏறக்கூடாதுன்னு சொல்வாங்க.

அதைப் பற்றி எங்க அம்மாவிடம் கேட்டபோது அவர் ஒரு உண்மைக்கதையைச் சொன்னார். அந்தக் கதையில் என் கற்பனையில் அந்தப் பெண்ணின் உருவமும் எனக்குள் பதிந்து விட்டது. சின்ன வயசில் தனியாக இருந்தபோது மஞ்சணத்தியைக் குறித்த பயம் எனக்குள் இருந்து இருக்கிறது. நான் காதலித்த பெண்கள், என்னை அடிக்க வந்த பெண்கள் எல்லோரையும் நான் மஞ்சணத்தியாக நினைத்து இருக்கிறேன். இப்படி எல்லாமுமாக எனக்குள் இருக்கிறார் மஞ்சணத்தி என்று அந்தப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் மாரி செல்வராஜ். அதன் காரணமாகத் தான் தன்னோட அடுத்த படத்துக்கு மஞ்சணத்தி என்று பெயர் சூட்டியுள்ளார்.

இளையராஜாவும், மாரிசெல்வராஜூம் முதன்முறையாக இணைந்த இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாம் மெலடி ரகங்களாக மனதில் ஒரு இதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. காதலில் உருகச் செய்துள்ளது இளையராஜாவின் இன்னிசை!

Tags

From Around the web