மாரிசெல்வராஜுடன் இணையும் அடுத்த சூப்பர் ஹீரோ! அப்போ இதுக்கு ஒரு முடிவே இல்ல போல

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் மாரிசெல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மாரிசெல்வராஜ். அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தீபாவளி ரிலீஸாக வரும் 17 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. பைசன் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் இது ஒரு கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படமாகத்தான் வரவிருக்கின்றது.
தனது படங்களில் மாரிசெல்வராஜ் சமூக அநீதி, சாதி வேறுபாடு, சமத்துவம் என பெரும்பாலும் பதிவு செய்து கொண்டே வருகிறார். இதனால் சிந்தனையுள்ள மக்கள் மத்தியில் மாரிசெல்வராஜுக்கு என தனி மரியாதையும் மதிப்பும் இருந்து வருகிறது. பெரும்பாலும் கற்பனை காட்சிகளை விட உண்மையில் நடந்த சம்பவத்தை பற்றித்தான் மாரிசெல்வராஜ் படங்களாக எடுத்து வருகிறார்.
பைசன் திரைப்படத்தில் கூட கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்களின் மூலம் சாதாரண மக்களின் குரலை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தார். இதனாலேயே அவரை மக்களின் இயக்குனர் என்றே கூறி வருகின்றனர்.
சாதி சார்ந்த அரசியல் கோணங்கள் அவர் படங்களில் பெரும்பாலும் இருப்பதாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக இவர் படங்கள் மூலமாகத்தான் மீண்டும் சாதி வெறி தாண்டவம் ஆடுகின்றன என்றும் விமர்சித்து வருகின்றனர். கல்லூரிகள், பள்ளிகள் என சாதிகளை முற்றிலும் அழிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் மீண்டும் சாதி என்றால் என்ன? யாரெல்லாம் மேல் சாதி? யாரெல்லாம் கீழ் சாதி என படங்களின் மூலம் மாரிசெல்வராஜ் விளக்க முயற்சித்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மாரிசெல்வராஜ் அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படம் பண்ண இருப்பதாக தகவல் வெளியானது. அதோடு இன்பநிதியுடனும் சேர்ந்து ஒரு படம் பண்ண போவதாக கூறப்பட்டது. இதற்கிடையில் நடிகர் கார்த்தியை வைத்தும் மாரி செல்வராஜ் படத்தை இயக்க போகிறாராம். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே அதற்கான பேச்சுவார்த்தையெல்லாம் முடிந்துவிட்டதாம்.
முழு ஸ்கிரிப்டையும் கார்த்தி கேட்டுவிட்டு பிடித்துவிட்டதாக சொல்லிவிட்டாராம். தன் அப்பா வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை வைத்துதான் இந்தப் படத்தை மாரிசெல்வராஜ் எடுக்கப் போகிறாராம்.எப்படியும் இந்தப் படம் 2028 ல் தான் வரும் என சொல்லப்படுகிறது.