×

முதல் மாதவிடாய் முடிந்திருந்தாலே திருமணம் செல்லும் – நீதிமன்றத் தீர்ப்பால் அதிர்ச்சியான பெற்றோர் !

பாகிஸ்தானில் 14 வயது சிறுமியின் திருமணம் இஸ்லாமிய ஷரியத் விதிகளின் படி செல்லும் என அறிவிக்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

 

பாகிஸ்தானைச் சேர்ந்த யூனிஸ் மற்றும் நஹினா தம்பதிகளுக்கு ஹூமா யூனிஸ் என்ற 14 வயது மகள் உள்ளார். இந்நிலையில் ஹூமா அப்துல் ஜாபர் என்ற நபரோடு பழக ஆரம்பித்து அது காதலாக மாறியுள்ளத். இதையறிந்த ஹூமாவின் பெற்றோர் காதலுக்காக குறுக்கே நிற்க அப்துல் ஜாபர், ஹூமாவைக் கட்டாயமாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதை எதிர்த்து ஹூமாவின் பெற்றோர் நீதிமன்றத்துக்கு செல்ல, இந்த வழககை விசாரித்த நீதிமன்றம் அதிர்ச்சியான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் ‘இஸ்லாமிய ஷரியத்தின் படி 14 வயது நிரம்பிய பெண்ணுக்கு திருமணம் செய்யும் உரிமை உண்டு. மேலும் ஒரு பெண் தன்னுடைய முதல் மாதவிடாய் சுழற்சியை முடித்திருந்தாலே அவரது திருமணத்துக்குத் தடை  இல்லை’ எனக் கூறியுள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இப்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News