×

இன்னும் இரண்டு நாளில் ஹன்சிகாவிற்கு திருமணம்..? மாப்பிளை இவரா...?

நடிகை ஹன்சிகா இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வதந்தி ஒன்று வெளியாகி தீயாக பரவியது. இது குறித்து ட்விட்டரில்,   Rubbish... யார் இந்த நபர்? எனக்கே தெரியாமல் என கிண்டலாக கமெண்ட் அடித்து ஹன்சிகா பேசிக்கொண்ட ஸ்க்ரீன் ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் எனத் தமிழின் முன்னணி நடிகர்களொடு ஜோடி போட்ட ஹன்சிகா இப்போது கிட்டத்தட்ட ஓரம் கட்டப்பட்ட நிலையில் உள்ளார். தற்போது ’மகா’ என்ற படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால். பிரபலங்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பான முறையில் ஓய்வெடுத்து வருகின்றனர். பொழுதுபோக்கிற்காக 24 மணி நேரமும் சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வரும் அவர்கள்,அவ்வப்போது ஏதேனும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் இதுபோன்ற வதந்திகளும் பரவி வருகிறது.  நடிகைகளின் திருமண வந்தந்திகளும் மாப்பிள்ளைகளும் நாளுக்கு ஒன்று செய்தியாக வருவது வழக்கமாகிவிட்டது. இதற்கு முன் நடிகை வரலக்ஷ்மி பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என வந்தது வந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News