×

ஆண்மைள்ள அரசா?.. டிவிட்டரில் அதிமுக - பாஜக மோதல்...
 

தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்திருக்கும் நிலையில் வினாநயகர் சதுர்த்தி அன்று இந்து அமைப்பு என்கிற பெயரில் பாஜகவின் பேரணி செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இது தவறு என ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் பலரும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.
 

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ரஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கர்நாடகாவில் வினாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என பதிவிட்டது அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, டிவிட்டரில்  எதிர்வினையாற்ற, சமூகவலைத்தளங்களில் அதிமுக - பாஜக மோதல் கருத்து மோதல் எழுந்துள்ளது.

அதிமுக தொழில்நுட்ப துறை சார்பாக போடப்பட்ட டிவிட்டில் ‘நோட்டாவோடு போட்டி போடுபவர்களின் தனிப்பட்ட மதவெறிக்காக எல்லாம் தொற்றுநோய்க்காலத்தில் தமிழக அரசு மக்களைப் பணயம் வைக்காது! வெறும் வாய்ப்பேச்சில் காட்டும் வீரத்தை தமிழ்நாட்டில் தனித்து நின்று டெபாசிட்டாவது வாங்கி தங்கள் ஆண்மையை நிரூபிக்கவேண்டும்!’ என பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்மை சண்டை எப்போது தீரும் என தெரியவில்லை...

From around the web

Trending Videos

Tamilnadu News