×

8 சண்டை காட்சிகள், மரண மாஸ் சேஸிங் காட்சிகள் - பரபரக்கும் வலிமை அப்டேட்!...

 
8 சண்டை காட்சிகள், மரண மாஸ் சேஸிங் காட்சிகள் - பரபரக்கும் வலிமை அப்டேட்!...

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில்  சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வலிமை பற்றிய சில செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

valimai

வலிமை ஒரு போலீஸ் அதிகாரி கதை. எனவே, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தாலும் விஸ்வாசம் படம் பல செண்டிமெண்ட் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதாம். அதேபோல், படத்தின் முதல் பாதியில் 5 சண்டை காட்சிகள், 2ம் பாதியில் 3 சண்டை காட்சிகள் என மொத்தம் 8 அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம். ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு எடுக்கப்பட்டுள்ள அந்த சண்டை காட்சிகளில் அஜித் மாஸ் காட்டியுள்ளாராம். அதேபோல் படத்தில் மிரள வைக்கும் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அஜித் ரசிகர்கள் செம விருந்து காத்திருக்கு என்கின்றனர் படக்குழுவினர்.

From around the web

Trending Videos

Tamilnadu News