×

`மாஸ்டர்’ படத்தில் `தோனி’ ரெஃபரென்ஸ்... மாஸ்காட்டும் டெலீட்டட் சீன்... இதப் பார்த்துட்டீங்களா?

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் தோனி குறித்து பேசும்
வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. 
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூஸ் தாஸ் உள்ளிட்ட ஸ்டார் கேஸ்டிங்கோடு பொங்கலையொட்டி வெளியான படம் மாஸ்டர். கொரோனா சூழலில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் கோலிவுட்டில் ஏற்பட்ட சுணக்கத்தைத் தீர்க்கும் ஆபத்பாந்தவனாக மாஸ்டரை அனைவரும் பார்த்தனர்.
 
அதற்கேற்றபடி தியேட்டர் ரிலீஸ்தான் என படக்குழுவும் உறுதியாக இருந்தது. இந்தநிலையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்தது. மாஸ்டரின் முதல் நாள் வசூல் மட்டுமே ரூ.26 கோடியைத் தாண்டியதாக திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியிருந்தார். அதேபோல், இந்தப் படத்தின் வசூல் உலக அளவில் ரூ.225 கோடியைத் தாண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. 
 


மாஸ்டர் படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில் அதைக் கொண்டாடும் வகையில் படத்தின் ஒரிஜினல் பேக்ரவுண்ட் ஸ்கோரை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். படம் தியேட்டர்களில் வெளியாகி 15 நாட்களிலேயே ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி டிஜிட்டலிலும் முத்திரை
பதித்தது. இந்தநிலையில், மாணவர்களிடம் தோனி குறித்து விஜய் பேசும் காட்சிகள் உள்ளிட்ட டெலீட் செய்யப்பட்ட சீன்களை அமேசான் பிரைம் நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News