×

ஓடிடியில் மாஸ்டர்... வெளியான சூப்பர் தகவல்... வெயிட்டிங்கில் ரசிகர்கள்    

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வரும் 29-ம் தேதி வெளியாக இருக்கிறது.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படம் தியேட்டர் ரிலீஸுக்காக ஓராண்டாகக் காத்திருந்தது. கொரோனா லாக்டவுன் விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் பொங்கலை ஒட்டி உலகமெங்கும் கடந்த 13-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் வசூல் 200 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. 

படத்தின் ரிலீஸுக்கு முன்பாக சில காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், படத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப முன்னணி டிஜிட்டல் நிறுவனத்திடம் கொடுத்தபோது, அதன் ஊழியர் ஒருவர் மூலம் படக் காட்சிகள் கசிந்த விவரம் தெரியவந்தது. இதுகுறித்து போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இந்தநிலையில், படத்தின் டிஜிட்டர் பிரீமியருக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் பிரைம் வெளியிட்டிருக்கிறது. முன்னர் 3 மாதங்களுக்குப் பின்னரே வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து தயாரிப்புத் தரப்பிடம் கூடுதல் தொகை கொடுத்து திட்டமிட்டதற்கு முன்பாகவே படம் வெளியிடப்படுகிறது. இதை 240 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்க்க முடியும் என அமேசான் பிரைம் கூறியிருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News