மாளவிகாலாம் நாயகியா? ரம்யா தான் அழகா இருக்காங்க... இதெல்லாம் ஓவர் ஆசையால இருக்கு...

மாஸ்டர் படம் பொங்கல் தினத்தில் வெளியாகியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மாளவிகா மோகனன், தொகுப்பாளினி ரம்யா, சாந்தனு, கௌரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட நட்சத்திர கோஷ்டியே படத்தில் இருந்தது. படம் வசூலில் பெரிய சாதனையை படைத்தது. தொடர்ந்து, அமேசான் ஓடிடியில் மாஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்நிலையில், ரசிகர்கள் மாஸ்டர் படம் குறித்து தொடர்ந்து ட்வீட்களை தெறிக்க விட்டு வருகின்றனர். அதில், ரசிகர் ஒருவர் மாளவிகா விட ரம்யா தான் அழகா இருக்காங்க அவங்க ஹீரோயினா இருந்து இருக்கலாம் என ட்வீட் தட்டி இருந்தார். இதற்கு சிலர் ஆமாம். ரம்யாவே நடித்து இருக்கலாம். ஹீரோயினை விஜய் லவ் செய்யவே இல்லை. அதனால் ரம்யா நாயகியாகி இருக்கலாம் என ஆதரவு ட்வீட்டை தட்ட பலர் இதெல்லாம் சரியில்லை. நடிப்பு தான் முக்கியம் அழகில்லை என மாளவிகாவிற்கு ஆதரவாக கூறியிருந்தனர்.
தொடர்ந்து, சத்தமே இல்லாமல், தன்னை நாயகியாக்கி இருக்க வேண்டும் என ரசிகர் போட்ட ட்வீட்டை ரம்யா லைக் செய்திருந்தார். என்ன சொல்ல வராங்கனு அவங்களுக்கு தான் தெரியும்.