×

உலகமே தலைகீழ உருண்டாலும் தியேட்டர்ல தான் ரிலீஸ் - விடாப்பிடியில் "மாஸ்டர்"

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில்  கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களோடு சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மாஸ்டர் படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக படங்கள் OTT தலத்தில் வெளியாகியுள்ளது. அதில் சூரியாவின் சூரரைப்போற்றும் அடங்கிவிட்டது. ஆனால் விஜய் மாஸ்டர் படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்பதில் படக்குழு முனைப்புடன் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2021 ஆண்டு உங்கள் தினத்தில் இப்படம் வெளியாக உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. கூடிய விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம். இதனை அறிந்த தளபதி ரசிகர்கள்... தரமான சம்பவத்தை கொண்டாட பொறுமை காத்திருப்போம் என உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News