தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள்! - சர்ச்சை பேச்சுக்கு பதில் கொடுத்த மகேந்திரன்..
கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் இருப்பவர் நடிகர் மாஸ்டர் மகேந்திரன். திரையுலகில் கடந்த 26 வருடங்களாக நடித்து வரும் இவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கேரக்டரில் நடித்து பலரது பாரட்டுகளையும் பெற்றார்.
சமீபகலமாக சென்னையில் ஏற்படும் மின்தடை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய மகேந்திரன், இவ்வளவு நாட்கள் மின்சாரத்துடன் ஜாலியாக இருந்த மக்கள் ஒரு ஆறு மாதம் இலாமல் இருக்க முடியாதா? மின்சாரம் இல்லையென்றால் என் வீட்டிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள். முதல்வரை கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா என்று பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கோபத்தையும் தூண்டியது. கடந்த சில தினங்களாக மகேந்திரனை கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மகேந்திரன் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியபோது, சமூக வலைதளங்களில் பகிரப்படும் குறுகிய வீடியோக்களில் நான் கூறிய கருத்துக்கள் முழுமையாக இருக்காது.அதுதான் இங்கு பிரச்சனை. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. மின்சார தேவையை சமாளிக்க சோலார் மின்சரமே சிறந்த வழி. கொச்சின் விமான நிலையம் போல நம் மாநிலத்திலும் சோலார் முறையை ஏன் செயல்படுத்தக்க்கூடாது என்றுதான் நான் கேட்டேன்.
மேலும் என்னை திட்டி தீர்ப்பவர்கள் உண்மையை அறியாமல் செயல்படுகிறார்கள். தவறாக புரிந்துகொண்டவர்கள்தான் தற்குறிகள். எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
