×

அடேங்கப்பா இத்தனை மொழிகளில் வெளியாகிறதா மாஸ்டர் திரைப்படம்?

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

 

இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி போனது, ஆனால் அடுத்த மாதம் பொங்கல் அன்று வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இப்படம் U/A சென்சார் சான்றிதழ் பெற்றது என்ற புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தற்போது இப்படம் விஜய் தி மாஸ்டர் என்ற தலைப்பில் ஹிந்தியிலும் வெளியாகும் என போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது. மேலும் தற்போது மாஸ்டர் தமிழ், தெலுங்கு. மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் வெளியாகும் என போஸ்டர்களுடன் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News