எதிர் இருக்கறவன் எமனா இருந்தாலும் பயப்படக்கூடாது... "மாஸ்டர்" அடுத்த ப்ரோமோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இத்திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது.
எனவே, இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை புரமோஷன் வீடியோ என்கிற பெயரில் படக்குழு தினமும் வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே 4 புரமோஷன் வீடியோக்கள் வெளியாகி மாஸ் கிளப்பியுள்ள நிலையில், தற்போது 5வது வீடியோ வெளியாகியுள்ளது.
இதுவரை வெளிவந்த 4 ப்ரோமோ வீடியோக்களிலும் விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ரொமான்டிக் சீன் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் மாஸ் வில்லன் விஜய் சேதுபதி விஜய்யுடன் மோதும் காட்சி தற்போது வெளியிட்டுள்ளனர். அதில், "உலகத்துல யாரை பார்த்து வேணாலும் பயப்படலாம். ஆனால், சாவு நம்மை நெருங்கிடுச்சுனா எதிருக்க இருக்கறவன் எமனாக இருந்தாலும் பயப்படக்கூடாது என வெறித்தனமா சண்டையிடும் இந்த காட்சியை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
#MasterPromo5 #Master #JD vs #Bhavani shootout!@actorvijay 🤜🏻🤛🏻 @VijaySethuOffl pic.twitter.com/UxNxxbzI0I
— Kaushik LM (@LMKMovieManiac) January 9, 2021