×

மாஸ்டர் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா..? ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் படக்குழு!

இந்தியாவில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனால் திரைப்படங்கள் வெளியாக முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதில் சிக்கிக்கொண்ட முக்கியமான திரைப்படங்களில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் ஒன்று.

 

கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம்  நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அப்படி மட்டும் நடந்தால் அக்டோபர் 25-ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தில் ட்ரைலர் ரிலீஸ் ஆகுமாம்.

ஒருவேளை கொரோனா முடிவுக்கு வரவில்லை என்றால் 2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர். ட்ரைலர் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. எவ்வளவு தாமதமானாலும் படம் தியேட்டரில் தான் வெளியாகும்... ஆன்லைன் தலத்தில் நிச்சயம் வெளியாகாது.  இந்த தகவல் தளபதி ரசிகர்களை அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News