×

மாஸ்டர் ரிலீஸ்… தயாரிப்பாளருக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு!

மாஸ்டர் படத்தினை முன்கூட்டியே ரிலிஸ் செய்யலாமா எனப் படத்தின் தயாரிப்பாளர்கள் யோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

மாஸ்டர் படத்தினை முன்கூட்டியே ரிலிஸ் செய்யலாமா எனப் படத்தின் தயாரிப்பாளர்கள் யோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடிப்பில் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதமே ரிலிஸ் ஆகி இருக்க வேண்டியது. கொரோனா காரணமாக 5 மாதமாக பெட்டிக்குள் தூங்கிக் கொண்டு இருக்கிறது. ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்வதை விஜய் விரும்பவில்லை எனத் தெரிகிறது. அதனால் படத்தை திரையரங்குகளிலேயே பொங்கல் பண்டிகையின் போது வெளியிடலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லபட்டது.

இதற்கிடையில் மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறந்துகொள்ள அனுமதி வழங்கியுள்ள நிலையில் மாஸ்டர் படத்தை முன் கூட்டியே தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாமா என தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. ஆனால் விஜய்யோ படம் பொங்கலுக்கே ரிலீஸாகட்டும் என சொல்லியுள்ளாராம். ஏனென்றால் திரையரங்குகளை திறந்ததும் ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் உள்ளது. இதனால் மக்கள் கொஞ்சம் இயல்புநிலைக்கு வந்ததும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என சொல்லியுள்ளாராம். ஆனால் தயாரிப்பாளருக்கோ நாளுக்கு நாள் வட்டி அதிகமாகிக் கொண்டே செல்வது குறித்த அச்சம் எழுந்துள்ளதாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News