×

மாஸ்டர் ஷூட்டிங் ஓவர்... ஆனால் தள்ளிப்போகும் ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் கல்லூரி மாணவர்களின் தலைவராக விஜய் நடித்துள்ளார். 
 

இப்படத்தில் இடம் பெற்ற ‘குட்டிக்கதை’ பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி யுடியூப்பில் ஹிட் அடித்தது. 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றோடு முடிவடைந்துள்ளது.

இப்படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், பட வேலைகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் பாக்கி இருப்பதால் அந்த தேதியில் வெளியிடுவது தாமதம் ஆகும் என தெரிய வந்துள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து இப்படம் மே மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News