×

லிடியன் நாதஸ்வரத்துக்கு இசைஞானி இளையராஜா கொடுத்த மாஸ்டர் சர்ப்ரைஸ்!

லிடியன் நாதஸ்வரத்துக்கு இசைஞானி இளையராஜா செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 14 வயதான லிடியன் நாதஸ்வரம், தற்போது இசை உலகில் இளம் பியானோ கலைஞனாக கலக்கி வருகிறார். 

 

அமெரிக்காவில் நடந்த ரியாலிட்டி ஷோவில் பரிசை வென்று ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையையும் தன் மீது விழ வைத்தார் லிடியன். மேலும் ஏ.ஆர்.ரகுமானையும் சந்தித்து இவர் வாழ்த்து பெற்றார். 

இந்நிலையில் லிடியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். இசைஞானி இளையராஜாவுடன் வீடியோ காலில் பேசிய போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ''மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்கள், எங்களது ரீசன்ட் வீடியோக்களை பார்த்து வீடியோ கால் மூலம் பாராட்டினார். இதற்கு நானும் என் குடும்பமும் பாக்யம் செய்திருக்கிறோம்'' என அவர் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News