×

விஜயின் அடுத்த படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்... தயாரிப்பாளர் அவர்தானாம்!... தளபதி 66 மாஸ் அப்டேட்...

 
vijay

விஜய் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, கோலமாவு கோகிலா, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. 

அங்கு அதிரடி சண்டை காட்சிகள் படம்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இப்படத்திற்கு பின் விஜயின் 66வது திரைப்படம் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மாஸ்டர் பட டீம் மீண்டும் இணையவுள்ளது. அதாவது, இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித் குமார் தயாரிக்கிறாராம். அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக அப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த படத்திற்கு பின் விஜய் ஒரு பேன் இண்டியா படத்தில் நடிக்கவுள்ளார். அதாவது, விஜய் இதுவரை தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடித்திருக்கவில்லை. இந்நிலையில், தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் தனது 67வது படத்தில் நடிக்கவுள்ளார். 

இப்படத்தை நாகார்ஜுனா- கார்த்தி ஆகியோரை வைத்து தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார் எனக்கூறப்படுகிறது. இப்படம் பிரம்மாண்டமாக தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News