விஜயை பார்த்து ஜொள்ளு விடும் ஆண்ட்ரியா.. புதிய புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய மாஸ்டர் டீம்...
Mon, 21 Dec 2020

பாடகியான ஆண்ட்ரியா சிறந்த நடிகையும் கூட. அவர் நடித்த திரைப்படங்களில் அவர் ஏற்கனவே அதை நிரூபித்துவிட்டார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.
இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜயுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.