×

டிக்கெட் விலை ரூ.50 மட்டுமே! என்னடா மாஸ்டருக்கு வந்த சோதனை!... 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளி விருந்தாக திரையரங்கில் வெளியான திரைப்படம் மாஸ்டர். 8 மாதங்கள் காத்திருந்து தியேட்டரில் வெளியிட்டதால் ரசிகர்கள் குடும்ப குடும்பாக சென்ற பார்த்ததால் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. இப்படம் ரூ. 150 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படம் வெளியாகி இரண்டே வாரத்தில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் போதே இப்படத்தை ஓடிடி தளமான அமேசாம் பிரைமுக்கு விற்றுவிட்டார் தயாரிப்பாளர். இது தியேட்டர் அதிபர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், 9 மாதங்களாக எந்த வருமானமும் இல்லாத நிலையில், மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்ததால் வேறு வழியின்றி அமைதி காத்து வருகின்றனர்.

தற்போது மாஸ்டர் படத்திற்கு தியேட்டர்கள் குறைக்கப்பட்டு விட்டது. 800 தியேட்டர்களில் வெளியான மாஸ்டர் தற்போது அதில் பாதியில் கூட ஓடவில்லை. கூட்டமும் குறைந்துவிட்டது. எனவே, ரசிகர்களை தியேடருக்கு வரவழைக்க டிக்கெட் விலையை அதிரடியாக தியேட்டர்கள் அதிபர்கள் குறைத்துள்ளனர். திருநெல்வேலியில் மிகவும் பிரபலமான் ‘ராம் முத்துராம் சினிமாஸ்’ தியேட்டர் மாஸ்டருக்கான டிக்கெட் விலையை ரூ.50 ஆக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் திரையிடப்படும் சிறப்பு காட்சிக்கு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News