×

12 பாடல்கள், 6000 தியேட்டர்கள்.... பட்டைய கிளப்பும் மாஸ்டர்!

பிகில் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் 6000க்கும் அதிகமான திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.

 

இந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், நாசர், அர்ஜூன் தாஸ், சாந்தனு, ரம்யா சுப்ரமணியன், தீனா, ஸ்ரீமன், கௌரி கிஷான், பிரிகிதா, ரமேஷ் திலக், அழகம் பெருமாள், பிரேம் குமார் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று யூடியூப்பில் சாதனையும் படைத்துவிட்டது. அண்மையில், இப்படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அண்மையில், இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்று செய்தியும் வெளியானது. அந்தளவிற்கு இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படம், கமல் ஹாசன் நடித்த நம்மவர் படத்தின் காப்பி என்றெல்லாம் தகவல் பரவியது. அதே போன்று தான் காட்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த 2020 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி மாஸ்டர் படம் திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News