விஜய் டிவி குக் வித் கோமாளி என்ற பெயரில் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதனால் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் உள்ளது.
உடனே விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவியும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொடங்கியது. அதுதான் மாஸ்டர் செஃப். கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் 14 போட்டியாளர்களுடன் பிரம்மாணடமாக இந்நிகழ்ச்சி தொடங்கியது.
என்னதான் நிகழ்ச்சியை நம்ம ஊரு ஹீரோ விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினாலும், இந்நிகழ்ச்சிக்கு சரியான வரவேற்பு இல்லை. டிஆர்பியிலும் மிகவும் பின்தங்கி காணப்பட்டது. விஜய் டிவி அளவிற்கு இல்லை என்றாலும் சுமாரான வெற்றி கூட கிடைக்கவில்லை.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு அவர்கள் தரப்பில் செய்த போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை திருப்பி அளிப்பதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு மாஸ்டர் செஃப் குழுவினர் வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால், நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு செல்லவில்லை என்பதால் போக்குவரத்து பணம் எதையும் யாருக்கும் திருப்பி தரவில்லை எனக்கூறப்படுகிறது.
இது தொடர்பாக நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் போட்டியாளர்கள் பேச முயன்றபோது போட்டியாளர்களுக்கு அவர்கள் சரியான பதில் கொடுக்கவில்லையாம். சிலர் குறைந்தபட்சமாவது காசு கொடுங்கள் என கேட்டதற்கு நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மறுத்துவிட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த புகார்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த புகாருக்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சி நிறுவனம் விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…