×

கடவுளின் கரங்கள் இளைப்பாறட்டும் - கே.வி.ஆனந்த் மரணத்திற்கு சிம்பு இரங்கல்

 
கடவுளின் கரங்கள் இளைப்பாறட்டும் - கே.வி.ஆனந்த் மரணத்திற்கு சிம்பு இரங்கல்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதவர் கே.வி.ஆனந்த். காதல் தேசம் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். கனா கண்டேன், கோ, அயன், மாற்றான்,அனேகன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். விரைவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

திடீர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் மரணமடைந்தர். அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணியளவில் பெசண்ட்நகர் மின் மயானத்தில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து இன்னும் திரையுலகம் மீளாத நிலையில் கே.வி.ஆனந்தின் மறைவு திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கே.வி.ஆனந்தின் மறைவுக்கு ரஜினி, கமல்ஹாசன், வைரமுத்து உட்பட திரையுலகினர்பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு ஒரு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியை தருகிறது.

மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவரக்ளை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடிக்க வேண்டியது. சில காரணங்களால் தவிர்க்கும் படியாகிவிட்டது.

சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்கு சொல்லி இருந்தார். தினமும் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. ஒளிப்பதிவாளர்களில் இயக்குனராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் திரைப்படங்களை அவர் தந்திருப்பார். அவரின் மறைவு பேரிழப்பு.

கடவுள் கரங்களில் இளைப்பாறட்டும்..

என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News