Categories: Bigg Boss latest news television

சீசன் தொடங்கிய போது போட்ட பிளானை பக்காவா செய்த மாயா!… இதுக்கு தான் பூர்ணிமா கூட சுத்துனதா?

Biggboss Maya: பொதுவாக எல்லா சீசன்களிலும் ஆண்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள். இரண்டாவது சீசனில் ரித்திகாவை தவிர இதுவரை தமிழ் பிக்பாஸில் பெண் வின்னர்களே இல்லை. ஆனால் இந்த சீசனில் கண்டிப்பாக ஒரு பெண் போட்டியாளர் தான் கப்பை அடிக்க போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனாலும் கூட இந்த சீசன் தொடங்கும் போது பிரதீப்புக்கே அதிக வாய்ப்பு இருந்தது. சில சூழ்ச்சிகளால் அவர் வெளியேற்றப்பட அந்த இடத்தினை தனக்கு மாற்றி கொண்டவர் அர்ச்சனா. அதுக்கு அவர் ரொம்பவே கஷ்டப்படவில்லை. தன் மீது தொடுக்கப்பட்ட இடியை சரியாக கையாண்டார்.

இதையும் படிங்க: கேப்டன் மில்லருக்கு டஃப் கொடுக்கும் அயலான்!.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?!..

தற்போது இந்த சீசன் கப்பை அர்ச்சனா தான் தட்டி தூக்குவார் என நம்பப்படுகிறது. அப்படி அவர் வெல்லும் பட்சத்தில் இரண்டாவது பெண் வின்னர் மட்டுமல்லாமல் முதல் வைல்ட் கார்ட் வின்னர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும். அதன் முடிவுகள் இன்று இரவுக்குள் தெரிந்து விடும் என நம்பப்படுகிறது.

அது இருக்கட்டும் மாயா பிளானை பத்தி பார்க்கலாம். இந்த சீசன் தொடங்கியதில் இருந்து தனக்கு பின்னாடி ஒரு கூட்டத்தையே வச்சி வந்தவர் மாயா கிருஷ்ணன். தன் குரூப்பை பழி கொடுத்தே அவர் இந்த பைனல் மேடையை பிடித்து இருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. சரியாக பிளான் செய்து காய் நகர்த்துவதில் அம்மணி கில்லாடி.

இதையும் படிங்க: பைனல் ஸ்டேஜ் ஏறப்போகும் போட்டியாளர்கள்!… பிரதீப்பை மறக்காத ரசிகர்கள்… பிபி டீம் செஞ்சத பாத்தீங்களா?

தற்போது சீசன் இறுதியில் பார்க்கும் போது மாயா மற்றும் பூர்ணிமா நட்பையும் சிலர் பாராட்டி வருகின்றனர். கிட்டத்தட்ட இது எதுவும் தானா நடக்கவே இல்லை. சரியான பிளானிங் என்பது முதல் சில வாரத்தினை வைத்து பார்க்கும் போது தெளிவாக புரிகிறது.  கவின் – சாண்டி பாண்டிங்கை கொண்டு வரவே இருவரும் சண்டை போட்டுக்கொள்ளாமல் அமைதியாக போக்கு காமிச்சாங்களோ என ரசிகர்களும் பேசி வருகின்றனர்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily