×

ஒருவேளை நான் தற்கொலை செய்துகொண்டால்... தமிழ் நடிகை வெளியிட்ட பகீர் அறிவிப்பு!

நடிகை பயல் கோஷ் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் மேல் பாலியல் குற்றச்சாட்டு கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

நடிகை பயல் கோஷ் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் மேல் பாலியல் குற்றச்சாட்டு கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் மேல் சில தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை பயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். தனியாக இருந்த தன் பேண்ட்டை கழட்ட முயற்சித்து காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டதாக புகார் கூறினார்.

ஆனால் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக அவரது முன்னாள் மனைவியும், அவரின் எல்லா படங்களின் எடிட்டருமான ஆர்த்தி பஜாஜ், நடிகை தாப்ஸி பண்ணு மற்றும் நடிகை ராதிகா ஆப்தே ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவருடன் இருக்கும் போது தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்ததாகவும் அனுராக் காஷ்யப் மிகவும் நல்ல மனிதர் எனவும் கூறியுள்ளனர். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் தூண்டுதல் பெயரில் பயல் கோஷ் இவ்வாறு பொய்ப் புகார் கூறுவதாக சொல்லப்பட்டது.

அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் பயல் கோஷ் இப்போது புதிதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு அனுராக் காஷ்யப்தான் காரணம்’ எனக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News