×

திருமணமான தம்பதிகளுக்கு பெட்ரோல் பரிசளித்த மயில்சாமி

புதுமண தம்பதியை வாழ்த்துவதற்காக மேடைக்குச் சென்ற நடிகர், மிகவும் அசாதாரண திருமண பரிசுகளில் ஒன்றான 5 லிட்டர் பெட்ரோலை வழங்கினார். 
 
Mayilsami

தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு திருமண விழாவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். புதுமண தம்பதியை வாழ்த்துவதற்காக மேடைக்குச் சென்ற நடிகர், மிகவும் அசாதாரண திருமண பரிசுகளில் ஒன்றான 5 லிட்டர் பெட்ரோலை வழங்கினார். 

Mayil

விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இணையத்தில் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன. மயில்சாமி புதுமண தம்பதியருக்கு பெட்ரோல் வழங்கிய விஷயம் சமூக வலைதளங்களில் வைரலானது. பெட்ரோல் விலை உயர்வு குறித்து தனது கவலையை வெளிப்படுத்தும் முயற்சியில், இரண்டு கேன்களில் பெட்ரோலை பரிசளித்ததாக தெரிவித்தார். 

mayilswamy

அதோடு, பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைத்ததற்காக தமிழக அரசையும் அவர் பாராட்டியுள்ளார். அதே நேரத்தில் மத்திய அரசு இந்த பிரச்னையில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News