×

7.5 சதவீத ஒதுக்கீடு ; சேர்க்கை ஆணை வழங்கிய முதல்வர் : கண்ணீர் மல்க நன்றி கூறிய பெற்றோர்கள்

 

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. கல்வி, விவசாயம், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழகத்தின் வளர்ச்சியை உயர்த்தும் வகையில் செயலாற்றி வருகிறது.

இந்திய அளவில் முதலீடுகளை ஈர்ப்பது, நீர் மேலாண்மையில் சாதனை படைத்து சாதனை பெற்றுள்ளது, காலாரா நோயை இல்லாமல் செய்தது, விவசாயிகளை பாதுகாப்பது என தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அதேபோல், மருத்து படிப்பிற்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டை அறிவித்து அரசாணை வெளியிட்டது.

சமீபத்தில் இதற்கான தர வரிசை பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 4061 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும்,  இதுவரை 951 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருப்பதாகவும், இந்த இட ஒதுக்கிட்டால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகும் எனவும் அவர் கூறியிருந்தார்.அதன்படி, பல ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்கும் ஆசை நிறைவேறியுள்ளது.  

eps

இதனைத்தொடர்ந்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மருத்துவ படிப்பில் சேரும் 18 அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வழங்கினார். அப்போது மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். சிலர் தங்களுக்கு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் சேர்க்கை கிடைத்திருப்பதாகவும், இதற்கு காரணம் அதிமுக அரசுதான் என நன்றி கூறினர். 

சிலருக்கு திருச்சி அரசு மருத்துவமனை கல்லூரியில் சேர்க்கை கிடைத்த ஒரு மாணவியின் தந்தை பேசும் போது ‘நான் கூலி வேலை செய்துதான் என் மகளை அரசு பள்ளியில் படித்து வைத்தேன். அவள் மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்டாள். எனவே, என்னால் முடியுமோ முடியாதோ என தினம் தினம் அழுது கொண்டிருந்தேன். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஐயாவல் என் கனவு நினைவாகியுள்ளது. அவர் 100 வருடத்திற்கு நன்றாக வாழ வேண்டும். அவருக்கு என் நன்றி’ என கண்ணீர் மல்க பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News