×

எனக்கும் மி டூ நடந்துள்ளது… ஆனால் ஆதாரம்?- நடிகை கஸ்தூரி டிவீட்டால் சர்ச்சை!

சினிமா உலகத்தைச் சேர்ந்த நடிகைகள் தாங்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகளை வெளி உலகத்துக்கு தெரிவிப்பது மீ டு இயக்கம் என அழைக்கப்பட்டு வருகிறது.

 

சினிமா உலகத்தைச் சேர்ந்த நடிகைகள் தாங்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகளை வெளி உலகத்துக்கு தெரிவிப்பது மீ டு இயக்கம் என அழைக்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட்டில் உருவான இந்த இயக்கம், கடந்த சில ஆண்டுகளாக இந்திய சினிமா துறையில் பல சர்ச்சைகளை உருவாக்கியது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பாலிவுட்டின் மிகவும் மதிக்கத்தக்க இயக்குனர் அனுராக் காஷ்யப் மேல் பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். ஆனால் அவரின் முன்னாள் மனைவி உள்பட பணியாற்றிய அனைத்து நடிகர்களும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மி டூ குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ் நடிகையான கஸ்தூரி தனது  டிவிட்டரில் ‘என்னுடைய அனுதாபங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மேல் உண்டு. ஆனால் சட்டத்துக்கு ஆதாரம் தேவை. ஏனென்றால் போலியான குற்றச்ச்சாட்டுகளால் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க, சட்டம் அம்மாதிரிதான் வடிவமைக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியிருந்தார்.

இதைப் பார்த்த ஒருவர் உங்கள் நெருங்கிய நண்பர்கள் யாருக்காவது இப்படி நடந்திருந்தால் இப்படி சொல்வீர்களா எனக் கேட்க அதற்கு கஸ்தூரி ‘என் நெருங்கியவர்களுக்கு ஏன்… எனக்கே நடந்துள்ளது… ஆனால் சட்டம் அப்படிதான்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News