×

தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊடங்கு நீட்டிப்பு? - வெளியான ஆதாரம்

இந்தியாவில் கொரொனா பரவலை தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இந்தியாவில் இதுவரை 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 872 பேர் உயிரிழந்துவிட்டனர். அதேபோல் 6,185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தமிழகத்தில் நேற்று மேலும் 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,885ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் காய்கறி உள்ளிட்ட நடமாடும் கடைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி சீட்டில் ஜூன் 30ம் தேதி வரை என அச்சடிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் 2 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்கிற அச்சம் வியாபாரிகளிடையே ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News