Categories: Cinema News latest news

மீனா ஆண் வேடத்தில் நடித்திருக்கிறாரா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் மீனா. தொடக்கத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, தெலுங்கில் “நவயுகம்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் “ஒரு புதிய கதை” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Meena

எனினும் இவர் கதாநாயகியாக நடித்த “என் ராசாவின் மனசிலே” திரைப்படம் இவரது கேரியரையே வேற லெவலுக்கு கொண்டு சென்றது. அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டாப் கதாநாயகியாக வலம் வந்தார். தமிழில் ரஜினி, கமல், அஜித், கார்த்திக் போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் அவர்.

தற்போது கூட சிறந்த குணச்சித்திர நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் மீனா. இந்த நிலையில் மீனா, ஆண் வேடத்தில் நடிக்க இருந்த திரைப்படம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.

Nenjangal

1982 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், லட்சுமி, மஞ்சுளா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நெஞ்சங்கள்”. இத்திரைப்படத்தை மேஜர் சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். நடிகர் விஜயக்குமார் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

இத்திரைப்படத்திற்கு ஒரு சிறுவன் கதாப்பாத்திரத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரத்தை தேடி வந்தனர். அப்போது ஒரு விழாவில் சிறு வயது மீனாவை பார்த்திருக்கிறார் சிவாஜி கணேசன். அவருக்கு மீனாவை மிகவும் பிடித்துப்போக, படக்குழுவினர் மீனாவின் தாயாரிடம் சென்று “ஒரு பையன் கதாப்பாத்திரத்திற்கு மீனாவை நடிக்க வைக்கலாமா?” என கேட்டிருக்கின்றனர்.

Meena in Nenjangal

அதற்கு அவர், “பையனாக நடிக்க வேண்டும் என்றால் மீனாவின் முடியை வெட்ட வேண்டியது வரும்” என கூறி மறுத்துவிட்டார். எனினும் மீனா போன்ற லட்சணமான சிறுமியை விட அவர்களுக்கு மனம் வரவில்லை. ஆதலால் படக்குழுவினர் பையன் கதாப்பாத்திரத்தை சிறு பெண் கதாப்பாத்திரமாகவே மாற்றிவிட்டனர். அதன் பிறகுதான் அத்திரைப்படத்தில் மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: கார்த்திக்கை வைத்து படம் எடுத்து நொந்துப்போன தயாரிப்பாளர்.. ஏழரை சனி சுத்தி வளைச்சி கும்மியடிச்சிருக்கே…

Arun Prasad
Published by
Arun Prasad