×

முடியலடா சாமி! எப்படி தான் இந்த உடையெல்லாம் போடுறாங்களோ? பிரபல நடிகை..

கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இந்த வெற்றியை பார்த்து ஏராளமான மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.தற்போது இப்படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது.
 

முதல் பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே 2-வது பாகத்தையும் இயக்க மோகன்லால்,மீனா இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை மீனா சமீபத்தில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு விமான பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது கவச உடை அணிந்து சென்ற மீனா தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், '' நான் விண்வெளிக்குச் செல்வதுபோல இருந்தாலும், நான் போருக்குச் செல்வதைப் போல உணர்கிறேன். 7 மாதங்களுக்குப் பிறகு பயணம் செய்கிறேன். விமான நிலையம் மிகவும் அமைதியாகவும், ஆள் அரவமற்றதாகவும் இருப்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. பலரும் என்னைப் போல உடையணியாமல் இருந்தது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. இது மிகவும் வசதியற்ற ஆடை என்று சொல்வேன்.

குளிர்ந்த வானிலையும், ஏசியும் இருந்தபோதும் மிகவும் வெப்பமாகவும், இறுக்கமாகவும், வியர்வையை ஏற்படுத்தக் கூடியதாகவும் இந்த ஆடை உள்ளது. கையுறைகள் காரணமாக முகத்தை துடைக்கக்கூட முடியவில்லை. இரவு பகலாக இந்த பிபிஇ (PPE) கவச உடையுடன் இருந்த சுகாதாரப் பணியாளர்களுக்குத் தலைவணங்குகிறேன்.  இத்தகைய சிரமத்திலும் அவர்கள் நமது வலியைப் புரிந்துகொண்டு நம்மை எப்போதும் பாதுகாக்கிறார்கள். அவர்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு அதிகமாகி விட்டது. மனித இனத்துக்கும் நீங்கள் செய்து வரும் தன்னலமற்ற சேவைக்கு நன்றி,'' என தெரிவித்து இருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News