தர்மன் அப்டேட்: சிம்ரன் ராஷிகண்ணாவுடன் இணைந்த விஜய் பட ஹீரோயின்

கூலி படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படம் தர்மன். ராஜ்கமல் பிலில்ம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தை 
 
dharman movie

கூலி படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படம் தர்மன். ராஜ்கமல் பிலில்ம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தை டிராகன் வெற்றிப்பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். முன்னதாக முதலில் கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, சிபி சர்க்ரவர்த்தி என வரிசையாக இயக்குனர்கள் மாறியவண்ணம் இருந்த நிலையில் தற்போது அஸ்வத் உறுதிசெய்யபட்ப்பட்டுள்ளார். இப்படத்தின் பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது.

dharman movie

தர்மன் படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், ராசிகண்ணா  நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் விஜய் நடித்த கோட் பட நாயகி மீனாட்சி சௌத்ரியும் இணைந்துள்ளார். ஏற்கெனவே அஸ்வத் மாரிமுத்து சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அந்த படத்தின் நாயகியாக மீனாட்சி சௌத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது அவரது தேதிகளை இப்படத்திற்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

From Around the web