×

உண்மையான மொகத்த வெட்சி பொழப்போட்டுங்கடி... மீண்டும் மட்டமாக இறங்கிய மீரா மிதுன்

பிக்பாஸ் மீரா மிதுனின் அடுத்த சர்ச்சை ட்வீட்டால் மீண்டும் ரசிகர்களிடம் வசை பேச்சுக்களை வாங்கி வருகிறார்.
 

மாடல் அழகியான மீரா மிதுன், சமீபத்தில் ஒரு அழகி போட்டி நடத்த இருந்தார். அதில் அவர் செய்த மோசடிகளால், அப்போது பெரிய பிரச்சனைகளை சந்தித்தார். தொடர்ந்து, கடந்த சீசன் பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்தார். அதில் தேவையே இல்லாமல் சில சண்டைகளை உருவாக்கி ட்ரெண்ட் ஆகிறேன் என்ற பெயரில் திட்டுக்களை அதிகம் வாங்கி கொண்டார். இயக்குநர் சேரன் தன்னை தவறாக தொட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய மீரா, அப்படி எதுவும் இல்லை எனக் குறும்படம் போடப்பட்டு பல்ப் வாங்கி வெளியேறினார்.

அதிலிருந்து, இவரின் ஆட்டம் ரொம்ப மோசமாக மாறி இருக்கிறது. ஆபாசமான ஸ்டேட்டஸ்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு சர்ச்சை கிளப்பினார். தொடர்ந்து, தமிழ் முன்னணி நடிகர்களை பற்றி அவதூறு கிளப்பினார். இதனால், மீராவின் ட்வீட்கள் வைரலாக பரவியது. ரசிகர்களும் கழுவி ஊற்றி கொண்டே தான் இருக்கிறார்கள். 

இந்நிலையில், மீராவின் சமீபத்திய ட்வீட் மீண்டும் வைரலாகி இருக்கிறது. அதில் பல சர்ச்சை கருத்துக்களை பேசி இருக்கிறார். அந்த வீடியோவில், ஆரி நல்லவன் இல்லை. ஆண் திமிரு உடையவர் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, என் முகத்தை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து ரம்யா பாண்டியனை அனுப்பி இருக்கிறார்கள். என் முகத்தை வைத்து ஏன் அனுப்ப வேண்டும் என தகாத வார்த்தைகளால் ட்வீட் தட்டி இருக்கிறார். இதற்கும் மீராவை ரசிகர்கள் கழுவி ஊற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஏன்மா இதுவும் நடிகர்கள் வேலைனு சொல்லிடாதமா.


 

null


 

From around the web

Trending Videos

Tamilnadu News