Categories: Cinema News latest news

எஸ்.ஜே. சூர்யாவோட நிலாவுக்கு திருமணம்!.. மாப்பிள்ளை யாரு தெரியுமா?.. மணக்கோலத்தில் கலக்குறாங்களே!..

எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்து வெளியான அன்பே ஆருயிரே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் மீரா சோப்ரா. தமிழில் நிலா என்ற பெயருடனே அவர் அறிமுகமானார். டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்த ஜாம்பவான், சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்த லீ, அர்ஜுன் நடிப்பில் வெளியான மருதமலை, சிம்புவின் காளை மற்றும் மீண்டும் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து இசை உள்ளிட்ட படங்களில் நிலா நடித்திருந்தார்.

பிரியங்கா சோப்ராவின் உறவுக்கார பெண் தான் மீரா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இருவருக்கும் பெரியளவில் நட்போ உறவோ கிடையாது. திருமணத்துக்கு கூட பிரியங்கா சோப்ரா வந்தது போல தெரியவில்லை.

இதையும் படிங்க: அஜித் இப்போ எப்படி இருக்காரு?.. ஷாலினி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. செம வைரல்!..

40 வயதாகும் மீரா சோப்ரா ரக்‌ஷித் கெஜ்ரிவால் எனும் தொழிலதிபரை இன்று திருமணம் செய்துக் கொண்டார். சற்றுமுன் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீரா சோப்ரா வெளியிட்டுள்ளார்.

சிகப்பு நிற லெஹங்கா உடையில் மீரா சோப்ரா மணப்பெண் கோலத்தில் ஜொலி ஜொலிக்க, ஐவரி நிற குர்தா உடையில் மாப்பிள்ளை ரக்‌ஷித் கெஜ்ரிவால் மாஸ் காட்டுகிறார். ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் தனது திருமணத்தை நடிகை மீரா சோப்ரா நடத்தி உள்ளார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா நண்பர்களை மட்டுமே மீரா சோப்ரா தனது திருமணத்துக்கு அழைத்துள்ளார் என்கின்றனர்.

இதையும் படிங்க: அமீருக்கு அடுத்தடுத்து ஆப்பு!.. இப்போ இப்படியொரு வழக்குல மனுஷன் மாட்டிக்கின்னாரே!..

தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வந்த மீரா சோப்ரா இந்தியிலும் நடிக்க வேண்டும் என்கிற முடிவில் சில இந்தி படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு அங்கே பெரிதாக படங்கள் ஓடவில்லை. மேலும், வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், விரக்தியடைந்த நிலையில், தற்போது திருமணம் செய்துக் கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறார்.

Saranya M
Published by
Saranya M