×

உனக்கு என்னதான் வேணும்? மீண்டும் சூர்யாவை வம்பிழுத்த மீரா மிதுன்!

மீண்டும் சூர்யாவை வம்பிழுத்த மீரா மிதுன்

 

நடிகை மீரா மிதுன் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் ஒவ்வொருவராக தாக்குதல் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவுக்கு நடிப்பே வராது என சொல்ல அது அவரின் ரசிகர்களை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கியது.

அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும், தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக மீரா மிதுனை பலரும் எச்சரித்து மோசமாக திட்டி மிரட்டினர். இதையடுத்து அண்மையில் தான் இறந்துவிட்டதாக கூறி தனக்கு தானே RIP ட்விட் போட்டு சர்ச்சை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்ப்போது மீண்டும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யாவிற்கு எதிராக ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில்,  "

நீட் பிரச்சனைய தங்களோட பட புரொமோஷனுக்கு பயன்படுத்திக்குறாங்க. நம்ம கேள்வி ரொம்ப சிம்பிள், mediaல discrimination இருக்கா ? இந்த hunger strike பத்தி ஏன் எந்த மீடியாவும் பேசல ? சூர்யா நீட் பத்தி பேசினத மட்டும் தான் மக்கள் கிட்ட கொண்டுபோய் சேர்ப்பீங்களா ?மக்கள் பண்ணுற போராட்டம் எல்லாம் ஏன் நியூஸ்ல கவர் பண்ணல. என கேட்டு சூர்யாவை வம்பிழுத்துள்ளார். இவ்வளவு நாள் நீட் பிரச்சனை எதிர்த்து பலர் குரல் கொடுத்த போது நீ எங்க போன? சூர்யா என்றால் ஓடி வந்துடுற.. ஈஸியா பப்ளிசிட்டி கிடைக்கும்னா? என ஆளாளுக்கு திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News