×

ஐயோ எனக்கு ஜாமீன் கொடுங்க... படத்தில நடிக்கனும்... புரொடியூசர் திட்டுவாங்க... கதறும் மீரா மிதுன்

நீதிமன்றத்தின் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் நான் கட்டுப்படுகிறேன். சாட்சிகளை கலைக்க மாட்டேன்” என்று மீரா மிதுன்
 
Meera

கேரளாவுக்குச் வெகேஷனில் சென்றிருந்த மீரா மிதுன் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்கிருந்து சென்னை கொண்டு வரப்பட்டார். இதனிடையே மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சென்னை காவல் நிலையத்திற்கு போலீசாரால் அழைத்து வரப்படும் போது கூட, “ஒரு பெண்ணுக்கு அராஜகம் நடக்கிறது.. எனக்கு ஒரு நாள் முழுவதும் உணவு கொடுக்கவில்லை” என்று கூச்சலிட்டுக் கொண்டே வந்த வீடியோ வைரலானது.

Meera

இதேபோல் தன் மீது போலீசார் கை வைத்தால் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொள்வேன் என்று முன்னதாக ஒரு வீடியோவில் மீரா மிதுன் பேசியிருந்தார். இந்த நிலையில்தான் மீரா மிதுன் மீது சைபர் க்ரைம் போலீஸார் 7 பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்ததுடன் அவரை புழல் சிறையில் அடைத்தது.

இந்நிலையில் தான், “நான் நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறேன். இப்போது என்னை சிறையில் அடைப்பதால், என்னால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஆகி விடும். எனவே எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று கோருகிறேன்.

Meera

நீதிமன்றத்தின் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் நான் கட்டுப்படுகிறேன். சாட்சிகளை கலைக்க மாட்டேன்” என்று மீரா மிதுன் ஜாமின் கோரிக்கைகளை முன்வைத்திருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

இதனிடையே போலீஸ் விசாரணையில் மீரா மிதுன் மாற்றி மாற்றி பேசியதாகவும், அதனால் மன நல மருத்துவரின் உதவியுடன் போலிஸார் அவரை விசாரிக்க போவதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News