×

உடம்பில் ஒட்டுத்துணி போடாமல் குத்தவச்சி அமர்ந்திருக்கும் போட்டோவை மோடிக்கு அனுப்பிய மீரா மிதுன்...!

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

 

அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வெளியில் வந்ததும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக அவ்வப்போது சமூகவலைத்தங்களில்  பதிவிடுவார். கூடவே தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதுபோல் சர்ச்சையில் சிக்கி கன்னாபின்னமாக்கப்படுவார்.

அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ஆடையே போடாமல் பிறந்த மேனிக்கு கை, மற்றும் கால்களால் உடலை மறைத்து கருப்பு பெயிண்ட் அடித்துக்கொண்டு வெறும் நகைகளை மட்டும் போட்டுக்கொண்டு குத்தவச்சு உட்கார்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டு "பெண்கள் முன்னேற்றம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த போட்டோவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு டேக் செய்துள்ளார். மீராவின் இந்த பதிவை கண்ட இணையவாசிகள், என் தலைவிக்கு தில்லு பார்த்தியா... தயவு செய்து எங்கள் மீரா மிதுனை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமனம் செய்யுங்கள் என மோடியிடம் கோரிக்கை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News