×

உதயநிதியையும் விட்டு வைக்காத மீரா மிதுன் - தீயாய் பரவும் புகைப்படம்

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

 

அந்த விவகாரத்தில் சர்ச்சை நடிகையாக பிரபலமான மீராவிற்க்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வெளியில் வந்ததும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக அவ்வப்போது சமூகவலைத்தங்களில்  பதிவிடுவார். கூடவே தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதுபோல் சர்ச்சையில் சிக்கி கன்னாபின்னமாக்கப்படுவார்.

இந்நிலையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு "நாம் இருவரும் இணைந்து ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம், நாம் இருவரும் இணைந்து வெற்றி பெறுவோம்" என்றும் கூறி உதயநிதி ஸ்டாலினையும் முக ஸ்டாலினையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ், இனம் இனத்தோடு சேர்ந்துவிட்டது என ட்ரோல் செய்ய துவங்கியுள்ளார். இனி மீரா மிதுன் கூட போட்டோ எடுக்குறதுக்கு முன்னாடி யோசிச்சுடுங்க எடுங்கப்பா யாராக இருந்தாலும் உங்க நலத்துக்கு தான் சொல்றோம்...

From around the web

Trending Videos

Tamilnadu News