×

படுக்கைக்கு சம்மதிச்சாதான் தமிழ் சினிமா வாய்ப்பு - மீராமிதுன் பரபரப்பு டிவிட்

 

மாடல் அழகிப்போட்டிகளை நடத்தி பல பெண்களிடம் மோசடி செய்த புகாரில் சிக்கியவர் மீரா மிதுன். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தன்னை இண்டர்நேஷனல் மாடல் என அவரே அழைத்துக்கொள்வார். மேலும், நடிகர்கள் சூர்யா, விஜய், திரிஷா உள்ளிட்ட பிரபலங்களை டிவிட்டரில் வம்பிழுத்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து வந்தார். மேலும், அதோடு, சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், ‘கோலிவுட்டில் படுக்கைக்கு சம்மதிக்கும் பெண்களுக்கே வாய்ப்பு கிடைக்கிறது. நான் அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வரவில்லை. அதுபோல் நான் செய்ய மாட்டேன்.  மோசமான கோலிவுட் உலகம், வெட்கமில்லாத தமிழ்நாட்டு பெண்கள்’ என பதிவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News