×

நான் தற்கொலை செய்தால் அவங்கதான் பொறுப்பு - மோடியிடம் புகார் செய்த மீரா மிதுன்...

 

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். அதேபோல், பப்ளிசிட்டிக்காக விஜய்,சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். ஆனாலும், யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ நான் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன். என் மன அழுத்தத்தை தொடர்ந்து என் சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகிறேன். ஆனாலும் வன் கொடுமை நிற்கவில்லை. நான் இறந்தால் இவர்கள் எல்லோரும்தான் காரணம். அவர்களை தூக்கில் போட வேண்டும். என் இறப்புக்கு பின்னர்தான் தலைவர்கள் பேசுவார்கள்’ எனக்கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு டேக் செய்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News