×

ஏன்டா பொய் சொல்றீங்க!.. மாஸ்டர் படம் பிளாப்.. விஜய் ரசிகர்களை காண்டாக்கிய மீரா மிதுன்...

 

மாஸ்டர் படம் குறித்து மீராமிதுன் பேச்சு

மாஸ்டர் படம் பிளாப் என்று மீராமிதுன் கூறியிருப்பது விஜய் ரசிகர்களை மிகவும் கோபப்ட்டுத்தியுள்ளது..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்து இருக்கும் படம் மாஸ்டர். மாளவிகா நாயகியாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாகி இருக்கிறார். இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. தளபதி படம் என்பதையும் தாண்டி பல மாத இடைவேளைக்கு பின்னர் திரையரங்கில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம். 

இப்படம் விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதேநேரம் லோகேஷ் கனகராஜின் முந்தையை படங்களான மாநகரம், கைதி ஆகிய படங்களை மனதில் வைத்து சென்றவர்களுக்கு இது வேறு மாதிரியான படமாக இருந்தது. வழக்கமாக விஜய் படங்களில் இருக்கும் மசாலா காட்சிகள் மாஸ்டர் படத்தில் இடம் பெற்றிருந்ததால் இது விஜய் ரசிகர்களுக்காவே எடுக்கப்பட்ட படம் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.  

இந்நிலையில், எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வரும் மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஊடகங்கள் எல்லாம் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறது. மாஸ்டர் மட்டமான தோல்வி. ஜெயலலிதா அம்மா இருந்திருந்தா படமே வெளியாகியிருக்காது.  நீங்கள் மீண்டும் ஒரு தோல்வி படத்தை கொடுத்துள்ளீர்கள் விஜய். ஊடகங்கள் பொய்யான செய்தியை நிறுத்துங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

இது விஜய் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News