×

வெட்கமே இல்லையா?... இவரெல்லாம் அம்மனா?... நயன்தாராவை சீண்டிய மீராமிதுன்...

நயன்தாராவை மீரா மிதுன் விமர்சித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

சமீப நாட்களாக மீரா மிதுன் திரிஷா, நயன்தாரா, கமல், விஜய், ரஜினி, சூர்யா என நடிகர்களை நடிகைகளை குறித்து அவதூறு பேசி சர்ச்சையாக பதிவிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். ஆனாலும், அவர் திருந்தவில்லை.

இந்நிலையில், தற்போது நயன்தாராவை வம்பிக்கிழுத்துள்ளார். ஆர்.ஜே. பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார். மீரா மிதுன் தனது டிவிட்ட ர்பக்கத்தில் ‘ திருமணம் ஆன ஆணுடன் உறவில் இருந்தவரெல்லாம் அம்மன் வேடத்தில் நடிப்பதா?. அவருக்கு அம்மன் யார் என தெரியுமா?..கோலிவுட்டில்தான் இந்த கடவுளை இப்படை இழிவுபடுத்தம் சம்பவங்கள் நடக்கிறது. இவர்களுக்கு வெட்கமே இல்லை. தமிழ் தலைவர்களும் இது பற்றி பேசுவதில்லை’ என டிவிட் செய்துள்ளார்.

meera

From around the web

Trending Videos

Tamilnadu News