×

உனக்குலாம் எதுக்கு அம்மன் வேடம்...? நயனை விளாசித்தள்ளிய மீரா மிதுன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கதாநாயகியை மையமாக கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

 

ஆர் ஜே பாலாஜியின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துள்ளார்.

திருமணமான ஆணுடன் உறவு வைத்திருந்தவர் எல்லாம் அம்மன் வேடம்மா என தனது சமூக வளைதள பக்கத்தில் நயன்தாராவை மீரா மிதுன் கிளித்து தொங்கவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து மீரா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஏற்கனவே திருமணமான ஆணுடன் உறவு வைத்திருப்பவருக்கு இந்து கடவுளான அம்மன் வேடத்தில் நடிக்க தகுதி இருக்கிறதா?

இதுபோன்ற இந்துக் கடவுள்களை அசிங்கப்படுத்தும் கதாபாத்திர தேர்வுக்கு அரசியல்வாதிகள் வாய் திறக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நிகழ்வுகள் எல்லாம் தமிழகத்தில் கோலிவுட் சினிமாவில் மட்டும்தான் நடக்கும்’ என்று  பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைப் பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள், ‘ நீ மொத உன்னுடைய லட்சணத்தை பாரு’ என்று மீரா மிதுனை சமூக வலைத்தளங்களில் நார் நாராய் கிழித்துக்கொண்டிருக்கின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News