×

தெரியாம பேசிட்டேன்!...மன்னிச்சுடுங்க எஜமான்...நீதிமன்றத்தில் பம்மிய மீராமிதுன்...

 
meera mitun

சமீபத்தில் மாடல் அழகி மீராமிதுன் தலித் சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்களை திரையுலகில் இருந்தே துரத்த வேண்டும் என்று அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். எனவே, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வந்த நிலையில், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் கேரளாவில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

meera

கேரளாவில் கைது செய்யப்படுவதற்கு முன்பு ‘போலீசார் என் மீது கை வைத்தால் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று யுடியூப்பில் வீடியோ வெளியிட்டார். அதேபோல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் அவரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை. மேலும், கத்திக்கொண்டே இருந்துள்ளார். மேலும், நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது என் கையை போலீசார் உடைத்துவிட்டனர். 24 மணிநேரம் எனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை என்றெல்லாம் கத்தினார். நீதிபதி முன்பும் இதேபோல் நடந்துள்ளார். 

meera

அவரை காவலில் எடுத்து விசாரித்தாலும் குற்றத்திலிருந்து தப்பிக்க அவர் மாற்றி மாற்றி பேசுவார் என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தரமாட்டார் என்கிற எண்ணம் போலீசாருக்கு வந்துள்ளது. எனவே, மனநல ஆலோசகரை வைத்து அவரை பரிசோதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மன அழுத்தம் காரணமாக இப்படி நடந்து கொள்கிறாரா என்பதை பரிசோதுத்து, மனநல ஆலோசகர் முன்னிலையிலேயே அவரிடம் வாக்குமூலம் பெற போலீசார் முடிவு  செய்துள்ளனர்,. 

meera-mithun-latest

இந்நிலையில், நீதிமன்றத்தில் மீராமிதுன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தன்னை தரக்குறைவாக பலரும் விமர்சித்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த போது வாய் தவறி தலித் சமுதாயத்தினர் பற்றி தெரியாமல் பேசிவிட்டேன் என விளக்கம் அளித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News